பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் உஸ்மான் கானின் அபாரமான சதத்தால் 20 ஓவரில் 262 ரன்களை குவித்த முல்தான் சுல்தான்ஸ் அணி, 263 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை குவெட்டா கிளாடியேட்டர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று ராவல்பிண்டியில் நடந்துவரும் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி:
ஜேசன் ராய், மார்டின் கப்டில், ஒமைர் யூசுஃப், முகமது ஹஃபீஸ், இஃப்டிகார் அகமது, உமர் அக்மல்(விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ் (கேப்டன்), காயிஸ் அகமது, உமைத் ஆசிஃப், நவீன் உல் ஹக், ஐமல் கான்.
IND vs AUS: ஷுப்மன் கில் அபார சதம்.. விராட் கோலி அரைசதம்..! பெரிய ஸ்கோரை நோக்கி இந்தியா
முல்தான் சுல்தான்ஸ் அணி:
உஸ்மான் கான், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, கைரன் பொல்லார்டு, டிம் டேவிட், குஷ்தில் ஷா, அன்வர் அலி, உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, இஸாருல்ஹக் நவீத், ஈசானுல்லா.
முதலில் பேட்டிங் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கானும் ரிஸ்வானும் இணைந்து காட்டடி அடித்து முதல் விக்கெட்டுக்கு 10 ஓவரில் 157 ரன்களை குவித்தது. ரிஸ்வான் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி சதமடித்த உஸ்மான் கான் 43 பந்தில்12 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 120 ரன்களை குவித்தார்.
அதன்பின்னர் பின்வரிசையில் டிம் டேவிட் 25 பந்தில் 43 ரன்களையும், கைரன் பொல்லார்டு 14 பந்தில் 23 ரன்களையும் விளாச, 20 ஓவரில் 262 ரன்களை குவித்து சாதனை படைத்தது முல்தான் சுல்தான்ஸ் அணி. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். 263 ரன்கள் என்ற கடினமான இலக்கை குவெட்டா அணி விரட்டிவருகிறது.
