பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் காலண்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவரில் 207 ரன்களை குவித்து, 208 ரன்கள் என்ற கடின இலக்கை லாகூர் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பெஷாவர் ஸால்மி - லாகூர் காலண்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ராவல்பிண்டியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பெஷாவர் ஸால்மி அணி:
முகமது ஹாரிஸ், பாபர் அசாம் (கேப்டன்), சயிம் அயுப், டாம் கோலர் காட்மோர், ஹசீபுல்லா கான் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், ஆமீர் ஜமால், வஹாப் ரியாஸ், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், முஜீபுர் ரஹ்மான், அர்ஷத் இக்பால்.
லாகூர் காலண்டர்ஸ் அணி:
ஃபகர் ஜமான், ஷாவைஸ் இர்ஃபான், சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), அப்துல்லா ஷாஃபிக், ஹுசைன் டலட், சிக்கந்தர் ராஸா, ரஷீத் கான், டேவிட் வீஸ், ஷாஹீன் அஃப்ரிடி (கேப்டன்), ஹாரிஸ் ராஃப், ஜமான் கான்.
முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் சயித் அயுப் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து 10.4 ஓவரில் 107 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி 36 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் அடித்தார். அரைசதம் அடித்த பாபர் அசாம் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் காட்டடி அடித்த டாம் கோலர் காட்மோர் 16 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்களை விளாசினார். அவர் அவுட்டானபின் பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்ததால் 19.3 ஓவரில் பெஷாவர் ஸால்மி அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்வரிசை வீரர்கள் சரியாக ஆடாததால் 207 ரன்கள் மட்டுமே அடித்தது. அவர்களும் பங்களிப்பு செய்திருந்தால் இன்னும் பெரிய ஸ்கோரை அடித்திருக்கலாம். 208 ரன்கள் என்ற கடின இலக்கை லாகூர் காலண்டர்ஸ் அணி விரட்டுகிறது.
