இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடிவருகிறது. கவுகாத்தியில் கடந்த 5ம் தேதி நடந்திருக்க வேண்டிய முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. 

இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த தொடரை வெல்ல வேண்டுமானால், அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே இரு அணிகளுமே இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

இந்த போட்டியில், முதல் போட்டியில் ஆடுவதாக இருந்த அதே அணி தான் களமிறங்கும். அதில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. ரோஹித் இந்த தொடரில் ஓய்வில் இருப்பதால், தவான் மற்றும் ராகுல் தொடக்க வீரர்கள். கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஷிவம் துபே ஆகியோர் முறையே 3 முதல் 6ம் வரிசை வரை இறங்குவார்கள். ஸ்பின் பவுலர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி ஆகியோரும் இறங்குவர். 

உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான், கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, பும்ரா.