இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இங்கிலாந்து அணி வென்ற நிலையில், அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. 

முதல் டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளுமே களமிறங்குகின்றன. இரு அணிகளுமே டி20 கிரிக்கெட்டில் வலுவான அணிகள் என்பதால், போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும். 

இந்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ள உத்தேச பாகிஸ்தான் அணியை பார்ப்போம். பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் டி20 அணியில் தொடக்க வீரர்களாக ஃபகார் ஜமான் மற்றும் ஹைதர் அலி ஆகிய இருவரும் இறங்குவார்கள். அணியில் ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ்,  வஹாப் ரியாஸ், முகமது அமீர் ஆகிய அனுபவ வீரர்களும், முகமது ரிஸ்வான், நசீம் ஷா ஆகிய இளம் வீரர்களும் என அனுபவமும் இளமைத்துடிப்பும் கலந்த அணியாக பாகிஸ்தான் உள்ளது. 

உத்தேச பாகிஸ்தான் அணி:

ஃபகார் ஜமான், ஹைதர் அலி, பாபர் அசாம்(கேப்டன்), ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), இஃப்டிகார் அகமது, இமாத் வாசிம், வஹாப் ரியாஸ், முகமது அமீர், நசீம் ஷா.