இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து கொல்கத்தாவில் வரும் 22ம் தேதி தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது.

இந்திய அணி ஆடவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுதான். இந்தியாவில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. டெஸ்ட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களை கவரும் விதமாக இந்த முன்னெடுப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பகலிரவு டெஸ்ட் என்பதால், பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியை பார்ப்போம். முதல் போட்டியில் ஆடிய அதே அணிதான் இரண்டாவது போட்டியில் களமிறங்கும். பேட்டிங், பவுலிங் என இரண்டுமே சிறப்பாக இருப்பதால் அணியில் மாற்றம் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஜடேஜா, ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), அஷ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷமி.