இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி வரும் 13ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்கவுள்ளது.

அந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பிலும் மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மேலும் 40 புள்ளிகளை பெறும் முனைப்பிலும் உள்ள இங்கிலாந்து அணியின், உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய தொடக்க வீரர்களாக செட் ஆகிவிட்டனர். எனவே அவர்கள் தான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். மூன்றாம் வரிசையில் ரூட், நான்காம் வரிசையில் பென் ஸ்டோக்ஸ், ஐந்தாம் வரிசையில் ஓலி போப், விக்கெட் கீப்பர் பட்லர்.

முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்த ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் கண்டிப்பாக ஆடுவார். ஸ்பின்னர் பெஸ். ஃபாஸ்ட் பவுலர்கள் ஆண்டர்சன், பிராட், ஆர்ச்சர். ஆண்டர்சன் முதல் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். அவர் அந்த போட்டியில் சரியாக பந்துவீசாததையடுத்து, அவரது ஓய்வு குறித்த சர்ச்சை எழுந்தது. ஆனால் தனக்கு இப்போதைக்கு ஓய்வுபெறும் ஐடியா இல்லை என தெளிவுபடுத்தினார். எனவே ஆண்டர்சன் - பிராட் ஜோடி கண்டிப்பாக ஆடும்.  3வது ஃபாஸ்ட் பவுலர் ஆர்ச்சர் தான். 

இந்த அணிதான் முதல் போட்டியிலும் ஆடியது. 2வது போட்டியில் இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. அதனால் அதே அணி தான் ஆடும்.

2வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஓலி போப், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், டோமினிக் பெஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.