Asianet News TamilAsianet News Tamil

கோவாவுக்கு ஜாலி ட்ரிப் போன பிரித்வி ஷாவை பாதி வழியில் மடக்கிய போலீஸ்..!

லாக்டவுனை விடுமுறை கொண்டாட்டத்திற்கான வாய்ப்பாக நினைத்து கோவாவுக்கு சென்ற கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
 

prithvi shaw stopped by police on his way to goa
Author
Goa, First Published May 14, 2021, 3:57 PM IST

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருவதால், கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் போடப்பட்டிருக்கிறது. ஐபிஎல் 14வது சீசன் 29 லீக் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காகத்தான் லாக்டவுன் போடப்பட்டிருக்கிறது. ஆனால் இதை கொண்டாட்டங்களுக்கான விடுமுறை தினமாக நினைத்து, இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, கோஹல்பூர் வழியாக கோவாவுக்கு சென்றார்.

prithvi shaw stopped by police on his way to goa

கோவாவுக்கு செல்லும் வழியில் அம்போலியில் பிரித்வி ஷாவை மடக்கிய போலீஸார், அவரிடம் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கான இ பாஸ் இருக்கிறதா என்று விசாரித்துள்ளனர். பிரித்வி ஷாவிடம் இ பாஸெல்லாம் இல்லாததால் அவரை அங்கேயே நிறுத்தினர்.

இதையடுத்து அந்த இடத்தில் இருந்துகொண்டே செல்ஃபோனில் இ பாஸ் அப்ளை செய்து, இ பாஸை பெற்றதும், ஒரு மணி நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு கோவா சென்றுள்ளார் பிரித்வி ஷா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios