IPL 2023: பிரப்சிம்ரன் சிங் அபார சதம்.. தனி ஒருவனாக பஞ்சாப்பை கரைசேர்த்த பிரப்சிம்ரன்..! DC-க்கு சவாலான இலக்கு
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, பிரப்சிம்ரன் சிங்கின் அபாரமான சதத்தால் 20 ஒவரில் 167 ரன்கள் அடித்து, 168 ரன்கள் என்ற சவாலான இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியும் புள்ளி பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று பிற்பகல் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியது லக்னோ அணி.
இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் பஞ்சாப் கிங்ஸும் ஆடிவருகின்றன. டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரைலீ ரூசோ, அமான் கான், அக்ஸர் படேல், பிரவீன் துபே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது, முகேஷ் குமார்.
IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணி:
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரன், சிக்கந்தர் ராஸா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் ஷிகர் தவான்(7), லியாம் லிவிங்ஸ்டோன்(4), ஜித்தேஷ் ஷர்மா(5), சாம் கரன் (20), ஹர்ப்ரீத் பிரார் (2), ஷாருக்கான்(2) என தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடிய தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங், சதமடித்து தனி ஒருவனாக பஞ்சாப் அணியை கரைசேர்த்தார்.
அதிரடியாக ஆடி சதமடித்த பிரப்சிம்ரன் சிங் 65 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார் பிரப்சிம்ரன் சிங். கடைசி ஓவரில் சிக்கந்தர் ராஸா ஒரு சிக்ஸர் அடிக்க, 20 ஓவரில் 167 ரன்கள் அடித்து, 168 ரன்கள் என்ற சவாலான இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்தது.