Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணியில் கண்டிப்பாக ஒரு அதிரடி மாற்றம்.. பாண்டிங் கணிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் என ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். 

ponting expects one change in indian team for the match against australia
Author
England, First Published Jun 8, 2019, 1:43 PM IST

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆடிய முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. அடுத்த போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. அந்த போட்டி நாளை நடக்கிறது. 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நாட்டிங்காமில் நேற்று முன் தினம் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனினும் ஸ்மித் - அலெக்ஸ் கேரியின் பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேர குல்டர்நைலின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 288 ரன்களை குவித்தது. 

289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹோப், பூரான், கேப்டன் ஹோல்டர் ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும், ஒரு நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் கடைசியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

ponting expects one change in indian team for the match against australia

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியிருந்தாலும், 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு ஒரு பயத்தை எற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்திய அதே ஷார்ட் பிட்ச் பந்துகளை போட்டே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள், ஆஸ்திரேலிய டாப் ஆர்டரை சரித்தனர். பந்து எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனதால், அதை பயன்படுத்தி ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி 38 ரன்களுக்குள்ளாகவே ஃபின்ச், வார்னர், உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல் ஆகிய நால்வரையும் வீழ்த்திவிட்டனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணி அடித்தது எச்சரிக்கை மணி என்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பட்ட அடியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு வீரர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் எனவும் பாண்டிங் எச்சரித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களிடமே இந்த அடி என்றால், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி என மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்ட இந்திய அணிக்கு எதிராக மிகவும் கடினமாகிவிடும் என்பதை அறிந்தே பாண்டிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ponting expects one change in indian team for the match against australia

மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் என 2 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஷமியையும் சேர்த்து 3 ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்கும் என பாண்டிங் கணித்துள்ளார். 2 ரிஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவரை நீக்கப்பட்டு ஷமி அணியில் சேர்க்கப்படுவார் என்பது பாண்டிங்கின் கருத்து. 

ஒரு பிரைம் ஸ்பின்னருடன் பார்ட் டைம் ஸ்பின்னரான கேதர் ஜாதவை மற்றொரு ஸ்பின்னராக பயன்படுத்தப்படுவார். எனவே ஒரு ஸ்பின்னருக்கு பதில் ஃபாஸ்ட் பவுலர் களமிறக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios