ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆர்ச்சர், 148 கிமீ வேகத்தில் வீசிய பவுன்ஸர், ஸ்மித்தின் பின் கழுத்தில் அடித்தது. உடனே நிலைகுலைந்து கீழே விழுந்தார். அந்த இன்னிங்ஸில் 92 ரன்கள் அடித்த ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸில் ஆடவில்லை. 

ஐசிசி-யின் புதிய விதிப்படி சப்ஸ்டிடியூட் பேட்ஸ்மேன் இறங்கலாம் என்பதால், இந்த விதிப்படி முதன்முறையாக ஸ்மித்துக்கு பதிலாக லாபஸ்சாக்னே இரண்டாவது இன்னிங்ஸில் இறங்கினார். அவர் நன்றாக ஆடினார். போட்டியும் டிராவில் முடிந்துவிட்டது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய பவுன்ஸரில், ஸ்மித்துக்கு பின் கழுத்தில் அடிபட்டது. அதனால் அவரால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடமுடியவில்லை. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு பதிலாக லாபஸ்சாக்னே பேட்டிங் ஆடினார். 

முன்பெல்லாம் வீரர்கள் காயம் என்றால் ஃபீல்டிங்கிற்கு மட்டுமே மாற்று வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அண்மையில் பேட்டிங்கிலும் சப்ஸ்டிடியூட் இறங்கலாம் என விதி கொண்டுவரப்பட்டது. அந்த விதி அமலுக்கு வந்த பிறகு, முதன்முறையாக சப்ஸ்டிடியூட் பேட்ஸ்மேனாக இறங்கியது லாபஸ்சாக்னே தான். அவரும் நன்றாக ஆடி 59 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க உதவினார். 

இந்த போட்டியில் ஸ்மித் அடிபட்டு கீழே விழுந்தபோது, பவுலர் ஆர்ச்சர் ஸ்மித்தை நலம் விசாரிக்காமல் இருந்ததோடு மட்டுமல்லாமல், அவர் வலியில் துடித்து கொண்டிருந்தபோது பட்லருடன் சேர்ந்து ஆர்ச்சர் சிரித்து கொண்டிருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதுகுறித்து ஆர்ச்சர் விளக்கமளித்தும் கூட, அக்தர் ஆர்ச்சரின் செயலை விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், இந்த சம்பவம் தனக்கு 2005 ஆஷஸ் போட்டியை நினைவுபடுத்தியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பாண்டிங், 2005 ஆஷஸ் போட்டியில் ஹார்மிசனின் பந்தில் எனக்கு அடி விழுந்த சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது. அப்போதைய இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், மற்ற வீரர்களிடம், அவரிடம்(பாண்டிங்) செல்லாதீர்கள். அவர் ஓகே-வா என்று மட்டும் கேளுங்கள் என்று சொன்னார். அதனால் யாருமே என்னிடம் வரவில்லை என்று அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.