Asianet News TamilAsianet News Tamil

#PSL ஃபைனலுக்கு முன்னேறப்போவது யார்..? நாக் அவுட் போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் அணியின் அதிரடி முடிவு

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் அணிக்கு எதிரான  2வது எலிமினேட்டரில் டாஸ் வென்ற பெஷாவர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

peshawar zalmi win toss opt to field against islamabad united in pakistan super league 2nd eliminator
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Jun 22, 2021, 9:31 PM IST

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்ற முல்தான் சுல்தான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. தகுதிச்சுற்று போட்டியில் தோற்ற இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் முதல் எலிமினேட்டரில் வென்ற பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான 2வது எலிமினேட்டர் போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸை எதிர்கொள்ளும். முக்கியமான இந்த நாக் அவுட் போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் அணி, இஸ்லாமாபாத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

பெஷாவர் ஸால்மி அணி:

ஹஸ்ரதுல்லா சேசாய், காம்ரான் அக்மல்(விக்கெட் கீப்பர்), ஜோனாதன் வெல்ஸ், ஷோயப் மாலிக், ரோவ்மன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, அமத் பட், வஹாப் ரியாஸ்(கேப்டன்), உமைத் ஆசிஃப், முகமது இம்ரான், முகமது இர்ஃபான்.

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:

உஸ்மான் கவாஜா, காலின் முன்ரோ, முகமது அக்லக்(விக்கெட் கீப்பர்), ஷதாப் கான்(கேப்டன்), பிரண்டன் கிங், ஆசிஃப் அலி, இஃப்டிகார் அகமது, ஹசன் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், முகமது வாசிம் ஜூனியர், அகிஃப் ஜாவேத்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios