Asianet News TamilAsianet News Tamil

#PSL நாங்களும் சளைச்சவங்க இல்லடா.. 248 ரன்கள் என்ற கடின இலக்கை வெறித்தனமா விரட்டிய பெஷாவர் அணி..!

248 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை பெஷாவர் ஸால்மி அணி வெறித்தனமாக விரட்டியது. ஆனால் 20 ஓவரில் 232 ரன்கள் அடித்து 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 

peshawar zalmi tried to reach tough target of 248 runs which is set by islamabad united but lost by 15 runs
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Jun 18, 2021, 6:25 PM IST

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இஸ்லாமாபாத் அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் காலின் முன்ரோ ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய முன்ரோ 28 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்து உஸ்மான் கவாஜாவுடன் இணைந்த ஆசிஃப் அலி, 14 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசி 43 ரன்களை குவித்து, மளமளவென அணியின் ஸ்கோரை உயர்த்திவிட்டு ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக ஆடி சதமடித்த உஸ்மான் கவாஜா 56 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 104 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். அவருடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரண்டன் கிங் 22 பந்தில் 46 ரன்களை விளாச, 20 ஓவரில் 247 ரன்களை குவித்தது இஸ்லாமாபாத் யுனைடெட் அணி.

248 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிய பெஷாவர் ஸால்மி அணியின் தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா சேசாய் டக் அவுட்டாக, 3ம் வரிசையில் இறங்கிய இமாம் உல் ஹக் 7 ரன்னில் ஆட்டமிழக்க, தொடக்க வீரர் காம்ரான் அக்மல் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். 32 பந்தில் 53 ரன்கள் அடித்தார் அக்மல்.

அதன்பின்னர் ஷோயப் மாலிக்கும் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். 36 பந்தில் 68 ரன்களை விளாசி மாலிக் ஆட்டமிழக்க, அதன்பின்னர் வந்த வீரர்கள் அனைவருமே அடித்து ஆடி தங்கள் பங்களிப்பை வழங்கி, வேகமாக ஸ்கோர் உயர உதவினர். ரூதர்ஃபோர்டு 8 பந்தில் 29 ரன்களும், வஹாப் ரியாஸ் 15 பந்தில் 28 ரன்களும், உமைத் ஆசிஃப் 9 பந்தில் 20 ரன்களும் அடிக்க, கடுமையாக போராடிய பெஷாவர் அணி 20 ஓவரில் 232 ரன்களை குவித்தது.

ஆனால் வெற்றி இலக்கை எட்ட முடியாததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது பெஷாவர் அணி. ஆட்டநாயகனாக சதமடித்த உஸ்மான் கவாஜா தேர்வு செய்யப்பட்டார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios