பிக்பேஷ் லீக்கில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெர்த்தில் நடந்தது. டாஸ் வென்ற ஹரிகேன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர் டார்ஷி ஷார்ட் அரைசதம் அடித்தார். ஆனால் 43 பந்தில் தான் 54 ரன்கள் அடித்தார். அனைத்து வீரர்களுமே பந்துக்கு நிகரான ரன் தான் அடித்தனர். ஹேண்ட்ஸ்கம்ப் 13 பந்தில் 13 ரன்களும் இங்ராம் 18 பந்தில் 18 ரன்களும் மட்டுமே அடித்தனர். டிம் டேவிட் 23 பந்தில் 31 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் ஹரிகேன்ஸ் அணி  20 ஓவரில் 139 ரன்கள் அடித்தனர்.

140 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் லிவிங்ஸ்டோன் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக அடித்து ஆடி, கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றனர். முதல் விக்கெட்டுக்கு 123 ரன்களை சேர்த்தனர். 

இருவருமே அரைசதம் அடித்த நிலையில், லிவிங்ஸ்டோன் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், கடைசி வரை களத்தில் நின்ற ஜேசன் ராய் 52 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் அடித்து ஸ்கார்ச்சர்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். 9 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கார்ச்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டார்.