ஆசியா லெவன் vs உலக லெவன் அணிகளுக்கு இடையேயான 2 டி20 போட்டிகளை வங்கதேச கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. மார்ச் 18 மற்றும் மார்ச் 21 ஆகிய 2 தேதிகளிலும் இரண்டு டி20 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த போட்டிகளுக்கான ஆசியா லெவனில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறவில்லை. 

ஆசியா லெவன் அணியில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறவில்லை. இரு அணி வீரர்களும் இணைந்து ஆடும் பேச்சுக்கே இடமில்லை. இந்திய அணி சார்பில் ஆசியா லெவனில் இடம்பெறும் 5 வீரர்களை பிசிசிஐ தலைவர் கங்குலி தேர்வு செய்வார் என்று பிசிசிஐ-யின் இணை செயலாளர் ஜாயேஷ் ஜார்ஜ் தெரிவித்திருந்தார். 

பாகிஸ்தான் வீரர்கள் ஆசியா லெவன் அணியில் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று திரித்துக்காட்ட பிசிசிஐ முயற்சிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆசியா லெவன் மற்றும் உலக லெவன் போட்டிகள் நடக்கும் தேதிகளில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் உள்ளன.

மார்ச் 22ம் தேதி வரை பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடப்பதால், ஆசியா லெவன் அணியில் பாகிஸ்தான் அணி வீரர்களால் இடம்பெற முடியாது என்று நாங்கள் ஏற்கனவே வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துவிட்டோம். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது பிசிசிஐ என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.