Asianet News TamilAsianet News Tamil

இவங்கதான் பெஸ்ட்.. கஷ்டமான பேட்ஸ்மேன்களை லிஸ்ட் போட்ட கம்மின்ஸ்

பந்துவீசுவதற்கு சவாலான பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார் பாட் கம்மின்ஸ்.
 

pat cummins names tough batsmen to bowled to around world
Author
Australia, First Published May 26, 2021, 9:25 PM IST

சமகாலத்தின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் பாட் கம்மின்ஸ். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் ஆடி அபாரமாக பந்துவீசி ஆஸி., அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுக்கும் வீரர்.

34 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 164 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள கம்மின்ஸ், 111 ஒருநாள் விக்கெட்டுகளையும், 37 டி20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் கம்மின்ஸ்.

இந்நிலையில், யூடியூப் சேனலில் பேசிய கம்மின்ஸ், பந்துவீசுவதற்கு கடினமான பேட்ஸ்மேன்களை பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கம்மின்ஸ்,  இங்கிலாந்தில் ரூட், ஸ்டோக்ஸ். இந்தியாவில் புஜாரா, கோலி. வில்லியம்சன், பாபர் அசாம், தென்னாப்பிரிக்காவில் டிவில்லியர்ஸ், டுப்ளெசிஸ் ஆகிய இவர்கள் அனைவருக்குமே பந்துவீசுவது சவாலானதுதான். அனைத்து அணிகளிலும் 2 சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா பிட்ச்களில் நல்ல வேகம் இருக்கும், பவுன்ஸும் இருக்கும். இங்கிலாந்தில் ஸ்விங் ஆகும். எல்லா சூழல்களுக்கும் ஏற்றவாறு வீசுவதுதான் சவால் என்றார் கம்மின்ஸ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios