Asianet News TamilAsianet News Tamil

PAK vs NZ: முதல் ஒருநாள் போட்டி டாஸ் ரிப்போர்ட்..! பாகிஸ்தான் அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர் அறிமுகம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

pakistan win toss opt to field against new zealand in first odi
Author
First Published Jan 9, 2023, 2:45 PM IST

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 2 போட்டிகளுமே டிராவில் முடிந்ததால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்துகொண்டன. அதைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

முதல் ஒருநாள் போட்டி கராச்சியில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குவதால் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை புகழ்ந்து தள்ளிய அக்ஸர் படேல்..! கடுப்பான ரோஹித் ரசிகர்கள்

டெஸ்ட் தொடரில் ஆடாத முகமது ரிஸ்வான், ஒருநாள் போட்டியில் ஆடுகிறார். உஸாமா மிர் என்ற ரிஸ்ட் ஸ்பின்னர் இந்த போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். அவர் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பாகிஸ்தான் அணி:

ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஹாரிஸ் சொஹைல், அகா சல்மான், முகமது நவாஸ், உஸாமா மிர், முகமது வாசிம், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப்.

நான் இன்றைக்கு நல்ல கேப்டனா இருக்கேன்னா, அதுக்கு ஆஷிஷ் நெஹ்ரா தான் காரணம் - ஹர்திக் பாண்டியா

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), டேரைல் மிட்செல், க்ளென் ஃபிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், ஹென்ரி ஷிப்லி, டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios