Asianet News TamilAsianet News Tamil

Asia Cup: ஹசரங்கா அபார பவுலிங்.. பாகிஸ்தானை சொற்ப ரன்களுக்கு பார்சல் செய்த இலங்கை

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இலங்கைக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே அடித்து, 122 ரன்கள் என்ற எளிய இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
 

pakistan set easy target to sri lanka in asia cup 2022 super 4 match
Author
First Published Sep 9, 2022, 9:43 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஃபைனலுக்கு பாகிஸ்தானும் இலங்கையும் தகுதிபெற்றுள்ள நிலையில், ஃபைனலுக்கான முன்னோட்டமாக இன்றைய கடைசி சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் ஆடிவருகின்றன.

ஃபைனல் நடக்கும் அதே துபாயில் தான் இந்த போட்டியும் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் காயமடைந்த ஜடேஜா..! ரோஹித், டிராவிட் செம கடுப்பு.. பிசிசிஐ அதிருப்தி

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்‌ஷனா, தில்ஷான் மதுஷங்கா.

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஹசன் அலி, ஹாரிஸ் ராஃப், உஸ்மான் காதிர், முகமது ஹஸ்னைன்.


முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி வீரர்களை எளிதாக ஸ்கோர் செய்யவிடாமல் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் இலங்கை பவுலர்கள். ரிஸ்வான் 14 பந்தில் 14 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், அறிமுக பவுலர் மதுஷன் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். 

இதையும் படிங்க - கோலியை திட்டுனீங்க.. இப்ப ரோஹித் என்னத்த செஞ்சுட்டாரு..? தவறான அணி தேர்வே தோல்விக்கு காரணம் - ஆகாஷ் சோப்ரா

ஃபகர் ஜமான் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாபர் அசாம் (30), இஃப்டிகார் அகமது(13), ஆசிஃப் அலி(0) ஆகிய மூவரையுமே ஹசரங்கா வீழ்த்தினார். நவாஸ் 18 பந்தில் 26 ரன்கள் அடித்தார். இலங்கையின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் 19.1 ஓவரில் 121ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி.

122 ரன்கள் என்ற எளிய இலக்கை இலங்கை அணி விரட்டிவருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios