Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தானை அரையிறுதிக்குள் நுழையவிடாமல் விரட்ட இந்திய அணி என்ன வேணா செய்யும்.. 1992 சம்பவத்தை சுட்டிக்காட்டி முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைவதும் நுழையாததும் இந்திய அணியின் கையிலும் உள்ளது. 

pakistan former cricketer basit ali raised bold allegation against india
Author
England, First Published Jun 28, 2019, 3:55 PM IST

உலக கோப்பை தொடரை படுமோசமாக தொடங்கிய பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் மீண்டெழுந்து அரையிறுதி வாய்ப்பை வலுவாக தக்கவைத்துள்ளது. 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியது. அதன்பின்னர் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக  தோல்வியை தழுவியது. இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அள்ளி தூற்றினர். அதன்பின்னர் வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி வென்றது. பாகிஸ்தான் அணி தொடர் வெற்றிகளை பெற்ற அதேவேளையில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்றது. 

pakistan former cricketer basit ali raised bold allegation against india

பாகிஸ்தான் அணி 7 போட்டிகளை ஆடியுள்ள நிலையில், 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை பெற்றுள்ளது. எஞ்சிய 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணி, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை எதிர்கொள்கிறது. அதேநேரத்தில் எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியோ, இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய வலுவான அணிகளை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்து அணி தோற்றால், பாகிஸ்தான் அணி இரண்டிலும் வென்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

எனவே இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற உதவ வேண்டும் என்று ஷோயப் அக்தர் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில், இந்திய அணி பாகிஸ்தான் அரையிறுதிக்கு வருவதை விரும்பாது. அதனால் வங்கதேசம், இலங்கை அணிகளிடம் வேண்டுமென்றே தோற்று பாகிஸ்தானை தொடரை விட்டு வெளியேற இந்திய அணி நினைக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கருத்து தெரிவித்துள்ளார். 

pakistan former cricketer basit ali raised bold allegation against india

அணிகள் அவற்றின் விருப்பத்திற்கேற்ப ஜெயிப்பதும் தோற்பதும் ஃபேஷனாகிவிட்டது. ஆஃப்கானிஸ்தான் போட்டியில் இந்திய அணி எப்படி வென்றது என்று பார்த்தீர்கள். இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா என்ன செய்தது? வார்னர் என்ன செய்தார்? என கேள்வி எழுப்பிய பாசித் அலி, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வருவதை இந்தியா விரும்பாது என தெரிவித்தார். அதற்காக வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளிடம் வேண்டுமென்றே தோற்கக்கூடும். 1992 உலக கோப்பையில் சொந்த மண்ணில் அரையிறுதி போட்டியை ஆடவேண்டும் என்பதற்காக பாகிஸ்தானிடம் வேண்டுமென்றே தோற்றது நியூசிலாந்து என்றும் தெரிவித்தார். 

பாகிஸ்தானை அரையிறுதிக்குள் நுழையவிடாமல் தடுக்க, இந்திய அணி வேண்டுமென்றே தோற்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios