Asianet News TamilAsianet News Tamil

அதைப்பற்றி நாங்க சொல்றதுக்கு எதுவும் இல்ல.. நைஸாக நழுவிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

நன்றாக வளர்ந்துவரும் நிலையில், பெண்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார். இமாம் உல் ஹக் பல பெண்களிடம் காதலிப்பதாக கூறி அவர்களுடன் வாட்ஸ் அப்பில் உரையாடியதை ஒரு பெண் டுவிட்டரில் பதிவிட்டு அம்பலப்படுத்தியுள்ளார். 

pakistan cricket board denied to response imam ul haqs controversy
Author
Pakistan, First Published Jul 25, 2019, 5:50 PM IST

பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் இமாம் உல் ஹக் காதல் என்கிற பெயரில் பல பெண்களை ஏமாற்றியதாக அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் உறவினரும் பாகிஸ்தான் அணியின் இளம் வீரருமான இமாம் உல் ஹக், அணியின் முக்கியமான வீரராக வளர்ந்துவருகிறார். உலக கோப்பையில் பாபர் அசாமிற்கு அடுத்து அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் தான். 

pakistan cricket board denied to response imam ul haqs controversy

நன்றாக வளர்ந்துவரும் நிலையில், பெண்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார். இமாம் உல் ஹக் பல பெண்களிடம் காதலிப்பதாக கூறி சேட் செய்ததை அமாம் என்ற ஒரு பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காதலிப்பதாகவும் ஆனால் திருமணம் செய்துகொள்ள முடியாது எனவும் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பெண்ணை பேபி என்று செல்லமாக அழைத்துள்ளார். இவ்வாறு அவர் செய்த உரையாடல்களை அந்த பெண் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

pakistan cricket board denied to response imam ul haqs controversy

இதையடுத்து இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கேள்வி எழுப்பியதற்கு, அது இமாம் உல் ஹக்கின் தனிப்பட்ட விஷயம் என்பதால் அதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது என்று வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios