கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 3 மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. இந்நிலையில், அடுத்த மாதம் முதல் இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடர்கள் நடக்கவுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அடுத்த மாதம்(ஜூலை) 8ம் தேதி முதல் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன. 

அந்த டெஸ்ட் தொடர் ஜூலை 28ம் தேதி முடிகிறது. அதைத்தொடர்ந்து, ஜூலை 30ம் தேதியே இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு செல்கிறது. 

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கென்று தனித்தனி வீரர்களை கொண்ட அணியை அறிவிக்காமல், மொத்தமாக 29 வீரர்களை கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை பார்ப்போம். 

பாகிஸ்தான் அணி:

தொடக்க வீரர்கள் -  அபித் அலி, ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், ஷான் மசூத்.

மிடில் ஆர்டர் வீரர்கள் - அசார் அலி(டெஸ்ட் அணி கேப்டன்), பாபர் அசாம்(டி20 அணி கேப்டன்), ஆசாத் ஷஃபீக், ஹைதர் அலி, இஃப்டிகர் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், ஃபவாத் ஆலம்.

விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான், சர்ஃபராஸ் அகமது.

ஃபாஸ்ட் பவுலர்கள் - ஃபஹீம் அஷ்ரஃப், ஹாரிஸ் ரௌஃப், இம்ரான் கான், முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, சொஹைல் கான், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ்.

ஸ்பின்னர்கள் - இமாத் வாசிம், ஷதாப் கான், காஷிஃப் பாட்டி, யாசிர் ஷா.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ் கானும் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக முஷ்டாக் அகமதுவும் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.