ஷமி முஸ்லீம் என்பதால் தான் அவர் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சேர்க்கப்படவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அனலிஸ்ட் ஒருவர் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

ஒவ்வொரு அணிக்கும் ஒரு திட்டம் இருக்கும். அந்த வகையில் இந்திய அணி பும்ரா - புவனேஷ்வர் குமார் தான் பிரதான ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் காயமடைந்ததால் அதன்பின்னர் 3 போட்டிகளில் ஷமிதான் ஆடினார். 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

ஆனாலும் புவனேஷ்வர் குமார் பவுலிங் ஸ்விங் ஆகும் என்பதால் அவர் தான் இந்திய அணியின் முதல் சாய்ஸ். ஷமி - புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரில் புவனேஷ்வர் குமாரைத்தான் இந்திய அணி முதல் சாய்ஸாக வைத்துள்ளது. அந்த வகையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் தான் ஆடினார். 

இந்நிலையில், ஷமி முஸ்லீம் என்பதால் தான் அவருக்கு இந்திய அணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்ற பகிரங்கமான குற்றச்சாட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் அனலிஸ்ட்(பகுப்பாய்வாளர்) ஒருவர் முன்வைத்துள்ளார். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொயின் கான் மற்றும் அந்த கிரிக்கெட் அனலிஸ்ட் கலந்துகொண்ட ஒரு விவாதத்தில் பேசிய அந்த அனலிஸ்ட், 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரு பவுலரை திடீரென ஓரங்கட்டியுள்ளனர். நானாக இருந்தால் அவரை ஓரங்கட்டியிருக்க மாட்டேன். ஷமி தொடர்ந்து ஆடினால் அதிகமான விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் வந்துவிடுவார். அவரை நீக்கியதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இந்திய அணி நிர்வாகத்துக்கு  ஷமியை உட்கார வைக்க வேண்டும் என்று அழுத்தம் வந்திருக்கும் என நினைக்கிறேன். முஸ்லீம்கள் வளர்ந்துவிடக்கூடாது என்ற கொள்கையை கொண்ட பாஜக, நெருக்கடி கொடுத்துத்தான் ஷமியை ஓரங்கட்டியிருக்கும் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 

இந்திய அணியில் அசாருதீன் நீண்ட காலம் கேப்டனாக இருந்திருக்கிறார். ஜாகீர் கான், கைஃப், யூசுஃப் பதான், இர்ஃபான் பதான் என எத்தனையோ முஸ்லீம் மதத்தை சார்ந்த வீரர்கள் முன்னணி வீரர்களாக ஜொலித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அணியில் முஸ்லீமை தவிர மற்ற மதத்தினரால் சேர்ந்துவிடமுடியாது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் யூசுஃப் யோகானா உட்பட 4 கிறிஸ்தவர்கள் பாகிஸ்தான் அணியில் ஆடியுள்ளனர். அவர்களில் யூசுஃப் யோகானா மட்டுமே பாகிஸ்தான் அணியில் கோலோச்சிய வேற்று மத வீரர். அவரும் பின்னாளில் முஸ்லீம் மதத்திற்கு மாறி தனது பெயரையும் முகமது யூசுஃப் என்று மாற்றிக்கொண்டார். இந்திய அணியில் ஆடிய எந்த வேற்று மதத்தினரும் இந்துவாக மாறியதில்லை. 

மஞ்சள் காமாலை உள்ளவன் கண்ணுக்கு பார்க்குறதெல்லாம் மஞ்சளா தான் தெரியும்..