தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை வீழ்த்தி தொடர் வெற்றிகளை குவித்துவரும் இந்திய அணி, அடுத்ததாக இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடவுள்ளது. இலங்கை அணி இந்தியாவிற்கு வந்து 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. 

அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆடுகிறது. இந்த தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வருகிறது. 2020 ஜனவரி 14, 17, 19 ஆகிய தேதிகளில் முறையே மும்பை, ராஜ்கோட் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன. அந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி, கடந்த 17ம் தேதியே அறிவிக்கப்பட்டது. 

உலக கோப்பையில் ஆடிய ஆஸ்திரேலிய அணியிலிருந்து 7 மாற்றங்கள் செய்து அந்த அணி அறிவிக்கப்பட்டிருந்தது. உலக கோப்பை அணியில் இருந்த உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், நாதன் குல்ட்டர்நைல், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் ஆகிய 7 பேரும் நீக்கப்பட்டு வேறு வீரர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் சீன் அப்பாட் நீக்கப்பட்டு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் ரிஸ்ட் ஸ்பின் பவுலிங் வீசக்கூடியவருமான டார்ஷி ஷாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட், கேன் ரிச்சர்ட்ஸன் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் அணியில் இருப்பதால், சீன் அப்பாட்டும் தேவையில்லை என்பதால், அவர் நீக்கப்பட்டு ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார். ஷார்ட் பேட்டிங் மட்டுமல்லாமல், ரிஸ்ட் ஸ்பின் பவுலிங்கும் வீசுவார். 

வார்னரும் ஃபின்ச்சும்தான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்பதால் ஷார்ட் ஆடும் லெவனில் வாய்ப்பு பெறுவது சந்தேகம்தான். 

மாற்றம் செய்யப்பட்ட பிறகான ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் அகார், அஷ்டன் டர்னர், கேன் ரிச்சர்ட்ஸன், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், டார்ஷி ஷார்ட்.