மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நடுவர்கள் அனைவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக செயல்படுவதாக விராட் கோலி உள்பட ஆர்சிபி ரசிகர்கள் அனைவரும் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 25ஆவது லீக் போட்டி தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக பாப் டூப் ளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களும், தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53 ரன்களும், ரஜத் படிதார் 26 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர்.

Scroll to load tweet…

Scroll to load tweet…

மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். இந்த நிலையில் தான் இந்த போட்டியில் கள நடுவர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டது தெளிவாக தெரிந்தது. ஆரம்பம் முதலே நடுவர்கள் நிதின் மேனன் மற்றும் வினீத் குல்கர்னி இருவரும் ஆர்சிபிக்கு எதிராகவே செயல்பட்டுள்ளனர்.

Scroll to load tweet…

ஏற்கனவே ஆர்சிபி வீரர் ரஜத் படிதார் அடித்த பவுண்டரியை பவுண்டரி லைனில் மும்பை வீரர் ஆகாஷ் மத்வால் தடுக்க முயன்றார். அப்போது அவரஹ்டு உடலானது பவுண்டரி லைனில் இருந்தது. மேலும் பந்து அவரது தொடையில் பட்டுள்ளது. அப்போது 3ஆவது நடுவராக இருந்த நிதின் மேனன் பவுண்டரி இல்லை என்று அறிவித்தார்.

இதையடுத்து, ஆகாஷ் மத்வால் வீசிய பந்து வைடாக சென்றது. ஆனால், நடுவர் இல்லை என்று அறிவித்தார். இதே போன்று பும்ரா வீசிய யார்க்கர் பந்து மகிபால் லோம்ராரின் கால்களில் பட்டு லெக் ஸ்டெம்பிற்கு வெளியில் சென்றது. அதற்கு அவுட் கொடுத்த நிலையில் லோம்ரார் ரெவியூ எடுத்தார். ஆனால், அதற்கு நடுவர் தீர்ப்பு என்று அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

இவ்வளவு ஏன், கடைசி ஓவரை தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். அந்த ஓவரை ஆகாஷ் மத்வால் வீசினார். அப்போது பந்து அவரது இடுப்பு பகுதிக்கு மேல் சென்றது தெளிவாக தெரிந்தது. ஆனால், அதற்கு நோபால் கொடுக்கவில்லை. அதற்கு தினேஷ் கார்த்திக் ரெவியூ கேட்டார். ஆனால், அதற்கு நோபால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இதை பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலி பவுண்டரி லைனில் நின்றிருந்த நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதையெல்லாம் கிரிக்கெட் வர்ணையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நடுவர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை கொடுத்து அணிய செய்துவிடலாம் என்று கிண்டல் செய்துள்ளனர். மும்பை பேட்டிங் செய்த போது டாப்லீ வீசிய ஓவரில் இஷான் கிஷானுக்கு வைடு அளிக்கப்பட்டது.

Scroll to load tweet…