வரும் ஆகஸ்ட் ஒன்று முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 9 அணிகளும் ஆடும் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டி. 

அனைத்து அணிகளுமே 3 உள்நாட்டு மற்றும் 3 வெளிநாட்டு தொடர்களில் ஆடும். இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையே 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் இறுதி போட்டி நடக்கும். 

வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கும் ஆஷஸ் தொடரிலிருந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்குகின்றன. நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. அந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி:

கேன் வில்லியம்சன்(கேப்டன்), கோலின் முன்ரோ, ஹென்ரி நிகோல்ஸ், டாம் லேதம்(விக்கெட் கீப்பர்), டி கிராண்ட் ஹோம், ரோஸ் டெய்லர், ஆஸ்டில், பிரண்டெல், ட்ரெண்ட் போல்ட், அஜாஸ் படேல், ஜீட் ராவல், சோமர்வில்லி, மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, நீல் வாக்னெர், வாட்லிங்.