Asianet News TamilAsianet News Tamil

டிரெண்ட் போல்ட்டின் அபாரமான பவுலிங்கால் வங்கதேசத்தை ஊதித்தள்ளிய நியூசிலாந்து

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

new zealand beat bangladesh by 8 wickets in first odi
Author
Dunedin, First Published Mar 20, 2021, 2:24 PM IST

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடக்கிறது.

முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், வங்கதேசத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் யாருமே சரியாக ஆடவில்லை. டிரெண்ட் போல்ட்டின் வேகத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.

வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் தமீம் இக்பால்(13), லிட்டன் தாஸ்(19) ஆகிய இருவருமே பதின்களில் ஆட்டமிழக்க, சௌமியா சர்க்கார் டக் அவுட்டானார். சீனியர் வீரர்கள் முஷ்ஃபிகுர் ரஹீம் 23 ரன்னிலும், மஹ்மதுல்லா 27 ரன்னிலும் ஆட்டமிழக்க, 41.5 ஓவரில் வெறும் 131 ரன்களுக்கு வங்கதேச அணி சுருண்டது.

new zealand beat bangladesh by 8 wickets in first odi

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும், சாண்ட்னெர் மற்றும் ஜிம்மி நீஷம் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

132 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில், இலக்கு எளிதானது என்பதால் ஆரம்பம் முதலே அடித்து ஆடினார். 19 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 38 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஹென்ரி நிகோல்ஸ் 53 பந்தில் 49 ரன்கள் அடித்து 22வது ஓவரிலேயே இலக்கை எட்ட உதவினார்.

new zealand beat bangladesh by 8 wickets in first odi

22வது ஓவரிலே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. டிரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios