நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடிவருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி வரும் 22ம் தேதி தொடங்கவுள்ளது. 

இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் கேப்டன் வில்லியம்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ட்ரெண்ட் போல்ட்டுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

வில்லியம்சன் இல்லாததால் ஃபாஸ்ட் பவுலர் டிம் சௌதி கேப்டனாக செயல்படவுள்ளார். மார்டின் கப்டில், கோலின் முன்ரோ, ஆஸ்டில், டெய்லர், சாண்ட்னெர், கோலின் டி கிராண்ட் ஹோம் ஆகியோர் அணியில் உள்ளனர். 

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி:

டிம் சௌதி(கேப்டன்), ஆஸ்டில், டாம் ப்ரூஸ், கோலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி ஃபெர்குசன், மார்டின் கப்டில், ஸ்காட் குஜ்ஜெலின், டேரில் மிட்செல், கோலின் முன்ரோ, செத் ரேன்ஸ், மிட்செல் சாண்ட்னெர், டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), இஷ் சோதி, ரோஸ் டெய்லர்.