Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!! அறிமுக வீரருக்கு வாய்ப்பு

உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமபலம் வாய்ந்த சிறந்த வீரர்களை கொண்ட அணியாக நியூசிலாந்து அணி உள்ளது. 
 

new zealand announced 15 members world cup squad
Author
New Zealand, First Published Apr 3, 2019, 10:18 AM IST

உலக கோப்பை வரும் மே மாத இறுதியில் இங்கிலாந்தில் தொடங்குகிறது. உலக கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருகிறது. 

2019 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. எனினும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, அண்மைக்காலமாக எழுச்சி கண்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சிறப்பாக ஆடிவருகிறது. 

new zealand announced 15 members world cup squad

பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. எனவே இந்த உலக கோப்பை கடும் போட்டி நிறைந்ததாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கப்போகிறது. 

உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்வதில் அனைத்து அணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்திய அணி வரும் 20ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சமபலம் வாய்ந்த சிறந்த வீரர்களை கொண்ட அணியாக நியூசிலாந்து அணி உள்ளது. 

new zealand announced 15 members world cup squad

கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில், மார்டின் கப்டில், கோலின் முன்ரோ, ரோஸ் டெய்லர், டாம் லதாம், ஹென்ரி நிகோல்ஸ் ஆகியோர் உள்ளனர். ஆல்ரவுண்டர் கோலின் டி கிராண்ட் ஹோம், ஜேம்ஸ் நீஷம் ஆகியோருடன் ஃபாஸ்ட் பவுலர்களாக டிரெண்ட் போல்ட், லாக்கி ஃபெர்குசன், டிம் சௌதி ஆகியோர் உள்ளனர். 

மாற்று விக்கெட் கீப்பராக இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடாத டாம் பிளண்டெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலக கோப்பை அணியில் இதுவரை சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

15 வீரர்களை கொண்ட நியூசிலாந்து அணி:

வில்லியம்சன்(கேப்டன்), மார்டின் கப்டில், கோலின் முன்ரோ, ரோஸ் டெய்லர், டாம் லதாம்(விக்கெட் கீப்பர்), ஹென்ரி நிகோல்ஸ், கோலின் டி கிராண்ட் ஹோம், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், மாட் ஹென்ரி, ஜேம்ஸ் நீஷம், லாக்கி ஃபெர்குசன், டாம் பிளண்டெல்(விக்கெட் கீப்பர்).
 

Follow Us:
Download App:
  • android
  • ios