இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. 

அந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக ஆடவில்லை. முழங்கையில் காயமடைந்துள்ள கேன் வில்லியம்சன், இந்த போட்டியில் ஆடவில்லை. எனவே டாம் லேதம் நியூசி., அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். வில்லியம்சனுக்கு பதிலாக வில் யங் அணியில் சேர்க்கப்படுவார்.

அடுத்ததாக வரும் 18-22ல் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்து அணி இந்தியாவை எதிர்கொள்ளவிருப்பதால், அதற்காக கைல் ஜாமிசன், டிம் சௌதி மற்றும் மிட்செல் சாண்ட்னெர் ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக மாட் ஹென்ரி, டிரெண்ட் போல்ட் மற்றும் அஜாஸ் படேல் ஆகியோர் சேர்க்கப்படலாம்.

உத்தேச நியூசிலாந்து அணி:

டாம் லேதம்(கேப்டன்), டெவான் கான்வே, வில் யங், ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், வாட்லிங், காலின் டி கிராண்ட் ஹோம், மாட் ஹென்ரி, நீல் வாக்னர், அஜாஸ் படேல், டிரெண்ட் போல்ட்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட்(கேப்டன்), ஆலி போப், டான் லாரன்ஸ், ஜேம்ஸ் பிரேஸி, க்ரைக் ஓவர்டன்/ஜாக் லீச், ஆலி ஸ்டோன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.