இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்ற இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிகமான டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது. கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்து சாதனைகளை படைத்துவருகிறது. இந்த சாதனைகளை கண்டு, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை விட அதிகமாக மகிழ்ச்சியடையும் ஒரு நபர் யாராகவும் இருக்கமுடியாது. 

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பயிற்சியின்போது கைகளை விரித்து வாம் அப் செய்துகொண்டிருந்த ஒரு புகைப்படத்தை பதிவிட்ட ஐசிசி, அதற்கு தலைப்பிடுமாறு கோரியிருந்தது. சும்மாவே ரவி சாஸ்திரியை பயங்கரமா கலாய்க்கும் நெட்டிசன்கள், இந்த வாய்ப்பை சும்மா விடுவார்களா? வைத்து செய்துவிட்டார்கள். 

டைட்டானிக் படத்தின் போஸுடன் ஒப்பீடு, நீட்டியிருந்த அவரது இரண்டு கைகளிலும் பீர் பாட்டிலை கொடுப்பது என பல மீம்ஸ்களை உருவாக்கி டுவிட்டர் முழுவதும் தெறிக்கவிட்டுள்ளனர்.