உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 352 ரன்களை குவித்தது. 353 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை 316 ரன்களுக்கு சுருட்டி 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா, அடிக்கடி தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டுக்கொண்டே இருந்தார். அவருடைய ஒரு ஓவரில் ஒவ்வொரு பந்துக்கும் இடையே பாக்கெட்டில் கைவிட்டார். இதைக்கண்டு சந்தேகமடைந்த ரசிகர்கள், ஸாம்பாவின் செயல்பாடு குறித்த சந்தேகத்தை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். ஸாம்பாவின் செயல்பாடுகள் சரியில்லை என்றும் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் ஏராளமான டுவீட் செய்துள்ளனர்.

ஸாம்பா பாக்கெட்டில் என்ன வைத்திருக்கிறீர்கள்? என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஐசிசி தோனியின் க்ளௌஸ் விவகாரத்தில் பிசியாக இருப்பதால், இதையெல்லாம் கண்டுகொள்ளாது என்று நக்கலடித்துள்ளனர். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்தும் வார்னரும் ஓராண்டு தடையில் இருந்து இப்போதுதான் மீண்டு வந்துள்ளனர். அந்த பாதிப்பிலிருந்தே ஆஸ்திரேலிய அணி தற்போது தான் மீண்டு வந்துள்ளது. இதுல மறுபடியுமா..?