இன்று வெளியாகும் நீட் தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ இல் பார்க்கலாம். 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு ஜூன் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இறுதி விடைக்குறிப்பு அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 14) வெளியாகின்றன. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/ இல் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்கள்
நாடு முழுவதும் கடந்த மே 4-ஆம் தேதி நடைபெற்ற இந்த நீட் தேர்வை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதியது குறிப்பிடத்தக்கது.
தேசிய தேர்வு முகமை கடந்த ஜூன் 3-ஆம் தேதி இத்தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட்டது. இந்த விடைக்குறிப்பு குறித்த ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படுகின்றன.
தேர்வு முடிவுகளைப் எப்படி பார்க்கலாம்?
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
முதலில், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/ க்குச் செல்லவும்.
அங்கு "NEET UG 2025 Result" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
திரையில் தோன்றும் புதிய பக்கத்தில், உங்கள் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் கடவுச்சொல்லை (Password) உரிய இடத்தில் டைப் செயது சமர்ப்பிக்கவும்.
இப்போது உங்கள் தேர்வு முடிவுகள் பிடிஎஃப் வடிவில் திரையில் தோன்றும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
