இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சற்றும் யோசிக்காமல் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் இருப்பதாலும் டீசண்ட்டான ஸ்கோர் அடித்தாலே அதை டிஃபெண்ட் செய்வதற்கான பவுலிங் யூனிட்டும் இருப்பதால் பேட்டிங்கை தேர்வு செய்தார் கோலி. 

தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் களத்திற்கு வந்து, அவசரப்படாமல் நிதானமாக தொடங்கியுள்ளனர். ஸ்டார்க் வீசிய இரண்டாவது ஓவரிலேயே ரோஹித் கொடுத்த கேட்ச் வாய்ப்பை குல்டர்நைல் தவறவிட்டார். ஸ்டார்க் வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தை ஃப்ளிக் ஷாட் அடித்தார் ரோஹித். ஸ்கொயர் லெக்கில் சென்ற அந்த பந்தை குல்டர்நைல் பிடிக்காமல் தவறவிட்டார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் ரோஹித்துக்கு இரண்டாவது ஓவரில் டுப்ளெசிஸ் கேட்ச் தவறவிட்டார். அதன்பின்னர் சுதாரித்துக்கொண்ட ரோஹித், சதமடித்து கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தார். இந்த போட்டியிலும் ரோஹித்துக்கு கேட்ச்சை தவறவிட்டுள்ளனர். இதிலும் பெரிய இன்னிங்ஸ் ஆடுகிறாரா என்று பார்ப்போம்.