மூட்ட முடிச்ச கட்டிக் கொண்டு செர்பியா புறப்பட்ட நடாசா ஸ்டான்கோவிச் – ஹர்திக் பாண்டியா விவாகரத்து உண்மையா?

நடாசா ஸ்டான்கோவிச் தனது லக்கேஜ் எல்லாவற்றையும் மூட்டைக் கட்டிக் கொண்டு செர்பியா செல்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Natasa Stankovic Confirms return to her Home Town Serbia after she shared insta story related with Packs bags with caption It's that time of the year rsk

அண்மை காலமாக சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் விவாகரத்து பெற்று கொள்வது வழக்கமாகி வருகிறது. அந்தப் பட்டியலில் தற்போது ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் இணைய இருப்பதாக அடுத்தடுத்து வெளியாகி வரும் செய்திகள் உறுதி செய்கின்றன. ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, மீண்டும் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு 2ஆவது முறையாக திருமணம் செய்தனர். கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார்.

ICC T20I Batting Rankings –ஆண்களுக்கான டி20 பேட்டிங் தரவரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 4ல் வெற்றியும், 10ல் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. அப்போது ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் இருவரது உறவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதோடு இருவரும் விவாகரத்து பெற இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

அதோடு, சமூக வலைதளங்களில் ஹர்திக் பாண்டியா உடன் இருக்கும் புகைப்படங்களை எல்லாம் நடாசா நீக்கினார். இது இருவருக்கும் இடையிலான பிரிவை உறுதி செய்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்தியா டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியது. இதில், இந்திய அணியின் வெற்றிக்கு ஹர்திக் பாண்டியா முக்கிய பங்கு வகித்தார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா பங்கேற்க வாய்ப்பு!

கடைசி ஓவரை சிறப்பாக வீசியதோடு டேவிட் மில்லரது விக்கெட்டையும் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டத்தில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அவர்களது மனைவிகளுடன் கலந்து கொண்டிருந்த போது பாண்டியா மட்டும் தனியாக கலந்து கொண்டார்.

மகளிர் ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் – 19ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது!

இந்த நிலையில் தான் நடாசா சமீபத்தில் சூட்கேஸ் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில், அந்த ஆண்டின் அந்த நேரம் என்று பதிவிட்டதோடு, விமானம் மற்றும் வீட்டின் எமோஜியையும் கூட சேர்த்து பதிவிட்டுள்ளார். அப்படி என்றால் நடாசா ஸ்டான்கோவிச் தனது சொந்த நாடான செர்பியாவிற்கு திரும்ப செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

இது உண்மையில் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதாவது, நடாசா உண்மையில் ஹர்திக் பாண்டியாவையும், அவரது வீட்டையும் விட்டு வெளியேறுகிறாரா என்ற ஆர்வத்தை எகிற வைத்துள்ளது. நடாசா செர்பியா நாட்டைச் சேர்ந்த நடிகை மற்றும் மாடல். இதுவரையில் நடாசா இந்திய நாட்டு குடிமகன் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios