வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்தது. இந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 265 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணியின் சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் இரட்டை சதம் மற்றும் கேப்டன் மோமினுல் ஹக் சதமடிக்க, முதல் இன்னிங்ஸில் சதமடித்தார். இவர்களின் அபாரமான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 560 ரன்களை குவித்தது வங்கதேச அணி. 

295 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி, 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. 

Also Read - ஒவ்வொரு போட்டியிலும் டீமை மாத்திகிட்டே இருந்தா வெளங்குமா? அந்த பையன ஏன் எடுக்கல? அணி நிர்வாகத்தை விளாசிய கபில் தேவ்

இந்த போட்டியில் 203 ரன்களை குவித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4413 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்ஃபிகுர் ரஹீம் படைத்துள்ளார். 4405 ரன்களை குவித்துள்ள தமீம் இக்பால் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரை பின்னுக்குத்தள்ளி தான் ரஹீம் முதலிடத்தை பிடித்துள்ளார். ஷகிப் அல் ஹசன் மூன்றாமிடத்தில் உள்ளார்.