Asianet News TamilAsianet News Tamil

கொரோனா தடுப்பூசி போட்டால்தான் ஆடலாம்னா நான் ஆடவே இல்லை..! சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து விலகிய Murali Vijay

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்து, சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து விலகியிருக்கிறார் முரளி விஜய் (Murali Vijay).
 

murali vijay refuses to take covid vaccine and pulls out of syed mushtaq ali trophy
Author
Chennai, First Published Nov 13, 2021, 4:09 PM IST

இந்தியாவில் நடத்தப்படும் உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் கடந்த 4ம் தேதி முதல் நடந்துவருகிறது. தமிழ்நாடு அணி இந்த தொடரில் சிறப்பாக ஆடிவருகிறது. இந்த தொடரில் தமிழ்நாடு அணியின் சீனியர் வீரரான முரளி விஜய் ஆடவில்லை.

இந்நிலையில், முரளி விஜய் கொரோனா தடுப்பூசி போட  மறுத்ததால் தான் அவர் அணியில் எடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவிலிருந்து மீள இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தீவிரமாக போடப்பட்டுவருகிறது. இந்தியாவில் 100 கோடி டோஸ்களுக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. நாளை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க - ஹனுமா விஹாரியை இந்திய அணியில் எடுக்காமல் இந்தியா ஏ அணியில் எடுத்ததற்கான காரணம் இதுதான்..!

கிரிக்கெட் ஆடவேண்டுமென்றால், வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம். அதுமட்டுமல்லாது கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்து தொடர் முடியும் வரை பயோபபுளில் இருக்க வேண்டும். ஆனால் தடுப்பூசி போடவும் மறுத்து, பயோபபுளில் இருக்க மறுத்ததால் முரளி விஜயை சையத் முஷ்டாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணியில் பரிசீலிக்கக்கூட இல்லை.

இதையும் படிங்க - T20 World Cup ஃபைனல்: நியூசிலாந்து - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை..! எந்த அணி ஜெயிக்கும்..? ஷேன் வார்ன் ஆருடம்

முரளி விஜய்  135 முதல் தர போட்டிகளிலும், 94 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ஆடி முறையே 9,205 மற்றும் 3,644 ரன்களை குவித்துள்ளார். இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3982 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios