கிடச்ச வாய்ப்பை கோட்டைவிட்ட யுபி வாரியர்ஸ் – தரமான சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ் 161 ரன்கள் குவிப்பு!
யுபி வாரியர்ஸ் மகளிர் அணிக்கு எதிரான 6ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் 6ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் மகளிர் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலீசா ஹீலி பவுலிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. மேலும், நாட் ஷிவர் பிரண்ட் இந்த போட்டியில் கேப்டனாக இடம் பெற்றார். முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.
இதில் ஹேலி மேத்யூஸ் மற்றும் யாஸ்திகா பாட்டீயா இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கி ரன்கள் சேர்த்தனர். யாஸ்திகா 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து கிரேஸ் ஹாரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், இதில், ஹேலி மேத்யூஸ் ரன் ஆக வேண்டியது.
ஷொபி எக்லெஸ்டன் பந்து வீசிய போது ஹேலி மேயூஸ் ஆஃப் சைடு திசையில் அடித்து விட்டு ரன்கள் எடுக்க ஓடி வந்தார். நாட் ஷிவர் பிரண்ட்டும் ஓடி வந்தார். இருவரும் பிட்சியில் பாதி தூரத்தில் நின்ற போது பூனம் கேம்னர் பந்தை பிடித்து எக்லெஸ்டனுக்கு அனுப்பினார். ஆனால், அவர் பந்தை பிடித்து அடித்திருந்தால் ஹேலி மேத்யூஸ் ஆட்டமிழந்திருப்பார். அப்போது மேத்யூஸ் 47 ரன்கள் எடுத்திருந்தார்.
எக்லெஸ்டன் பந்தை விக்கெட் கீப்பர் திசைக்கு அனுப்ப ஷிவர் பிரண்ட் ஆட்டமிழந்தார். கடைசியாக மேத்யூஸ் அரைசதம் அடித்து 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்தது.
பவுலிங் தரப்பில் யுபி வாரியர்ஸ் அணியில் அஞ்சலி சர்வானி, கிரேஸ் ஹாரிஸ், ஷோபி எக்லெஸ்டன், தீப்தி சர்மா மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். யுபி வாரியர்ஸ் அணியைப் பொறுத்த வரையில் கொடுக்கப்பட்ட கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டனர். இதுவரையில் விளையாடிய 2 போட்டியிலும் யுபி வாரியர்ஸ் 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.