MIW vs RCBW: வெளியேறப்போவது யார்? 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு செல்லுமா மும்பை?
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் இன்று நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மாதம் பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் வழக்கம் போல் குஜராத் ஜெயிண்ட்ஸ் வெளியேற்விட்டது. கடந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற யுபி வாரியர்ஸ் இந்த சீசனில் 2ஆவது அணியாக தொடரிலிருந்து வெளியேறியது. டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பெற்றுள்ளது. அதோடு, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் சீசனிலும் டெல்லி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முனேறியது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று நடப்பு சாம்பியனான மும்பை இந்தியஸ் விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் இறுதிப் போடிக்கு செல்லும் அணிக்கான போட்டி இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி டெல்லியுடன் இறுதிப் போட்டியில் மோதும். தோல்வி அடையும் அணி எலிமினேட் ஆகும். கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட வராமல் வெளியேறிய ஆர்சிபி அணி இந்த சீசனில் 3ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்று நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் மும்பை வெற்றி பெற்றால் டெல்லியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். இதுவே ஆர்சிபி வெற்றி பெற்றால் டெல்லியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.