Asianet News TamilAsianet News Tamil

#MIvsRR மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிர்ச்சிகர மாற்றம்..! ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

mumbai indians win toss opt to field against rajasthan royals in ipl 2021
Author
Delhi, First Published Apr 29, 2021, 3:19 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இதுவரை இந்த இரு அணிகளுமே, ஆடிய 5 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், 3வது வெற்றியை பெறும் முனைப்பில் இன்று களம் காண்கின்றன.

டெல்லியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா, ராஜஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு சர்ப்ரைஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் இதுவரை சோபிக்காத இஷான் கிஷனுக்கு பதிலாக ஆஸி., ஆல்ரவுண்டர் நேதன் குல்ட்டர்நைல் சேர்க்கப்பட்டுள்ளார். சரியாக ஆடாத வீரராக இருந்தாலும், அணியின் கோர் வீரர்களை பெரும்பாலும் மாற்ற விரும்பாத மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த போட்டியில் இஷான் கிஷனை ஓரங்கட்டியிருப்பது வியப்பான விஷயமே. அந்த ஒரு மாற்றத்தைத்தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு, நேதன் குல்ட்டர்நைல், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், பும்ரா. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ஷிவம் துபே, ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனாத்கத், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சேத்தன் சக்காரியா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios