லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 15வது சீசனில் இன்று பிற்பகல் மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் மோதுகின்றன. இந்த சீசனில் இதுவரை ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாசில் தம்பி நீக்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் ஸ்பின் ஆல்வுண்டர் ஃபேபியன் ஆலன் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் பிரெவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கைரன் பொல்லார்டு, ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனாத்கத், முருகன் அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, டைமல் மில்ஸ்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணப்பா கௌதமுக்கு பதிலாக மனீஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், க்ருணல் பாண்டியா, துஷ்மந்தா சமீரா, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
