மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆடம் மில்னே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக உள்நாட்டு ஸ்பின்னரான ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், பும்ரா, டிரெண்ட் போல்ட். 

டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த போட்டியில் அறிமுகமான ஃபாஸ்ட் பவுலர் மேரிவாலா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சீனியர் ஸ்பின்னர் அமித் மிஷ்ராவும், ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மயரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சீசனில் முதல் போட்டியில் ஆடிய ஹெட்மயருக்கு அடுத்த 2 போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படாத நிலையில், இந்த போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், ரபாடா, ஆவேஷ் கான், அமித் மிஷ்ரா.