ராஜஸ்தான் ரயால்ஸ் அணிக்கு எதிரான 14ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 125 ரன்கள் எடுத்து இந்த சீசனில் குறைவான ரன் எடுத்த முதல் அணி என்ற மோசமான சாதனை படைத்துள்ளது.

வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 14ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஓபனிங் இறங்கினர். இதில், ரோகித் சர்மா, நமன் திர் மற்றும் டெவால்டு பிரேவிஸ் ஆகியோர் டிரெண்ட் போல்ட் ஓவரில் கோல்ட டக் முறையில் ஆட்டமிழந்தனர்.

திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டுமே அதிகபட்சமாக 32 ரன்கள் மற்றும் 34 ரன்கள் எடுத்தனர். இஷான் கிஷான் 16 ரன்னும், டிம் டேவிட் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜெரால்டு கோட்ஸி 4 ரன்களில் வெளியேற கடைசியாக பும்ரா 8 மற்றும் ஆகாஷ் மத்வால் 4 ரன்கள் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலமாக இந்த சீசனில் குறைந்த ஸ்கோர் எடுத்த முதல் அணி என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது. இன்னும், போட்டிகள் இருக்கும் நிலையில், இதுவரையில் 125 ரன்கள் எடுத்து குறைந்த ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக MI vs RR போட்டியின் குறைந்தபட்ச முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்:

94/8 , ஜெய்ப்பூர், 2011
125/9 , வான்கடே, 2024*
133/5, வான்கடே, 2011
145/7, ஜெய்ப்பூர், 2008

அதுமட்டுமின்றி இந்த சீசனில் பவுலிங்கில் அதிக ரன்கள் கொடுத்த அணி என்ற சாதனையையும் மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது. ஹைதராபாத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த 8ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 277/3 ரன்கள் கொடுத்துள்ளது. இந்தப் போட்டியில் 246/5 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Scroll to load tweet…