மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் ஆடியது.

தொடக்க வீரர் குயிண்டன் டி காக் வெறும் ஒரே ரன்னில் ஆட்டமிழக்க, ரோஹித்தும் சூர்யகுமாரும் இணைந்து அடித்து ஆடி, பவர்ப்ளேயில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி வேகமாக ஸ்கோர் செய்தனர். 

சூர்யகுமார் யாதவ் 15 பந்தில் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய ரோஹித்தும் 30 பந்தில் 44 ரன்கள் அடித்திருந்த நிலையில், அமித் மிஷ்ராவின் சுழலில் வீழ்ந்தார். அதன்பின்னர் ஹர்திக் பாண்டியா(0), பொல்லார்டு(2) மற்றும் இஷான் கிஷன்(26) ஆகிய மும்பை அணியின் முக்கியமான வீரர்கள் அனைவரையுமே அமித் மிஷ்ரா தனது சுழலில் வீழ்த்தினார்.

ஜெயந்த் யாதவ் 22 பந்தில் 23 ரன்கள் அடித்து, 20 ஓவரில் 137 ரன்களை எட்ட உதவினார். மிரட்டலான பேட்டிங் ஆர்டரை கொண்ட மும்பை அணியை 137 ரன்களுக்கு சுருட்டியது டெல்லி கேபிடள்ஸ் அணி. 138 ரன்கள் என்ற எளிய இலக்கை டெல்லி அணி விரட்டிவருகிறது.