Rohit Sharma vs Hardik Pandya: பழிதீர்ப்பாரா ரோகித் சர்மா? நாளை நடக்கும் போட்டிக்கு 3000 ரசிகர்களுக்கு அழைப்பு
மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் 3000 ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன்ஸி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பலவிதமான குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 5 முறை டிராபி வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி மும்பை இந்தியன்ஸ் அணி துரோகம் இழைத்துவிட்டது என்று ரோகித் ரசிகர்கள் கோபத்தில் கொந்தளிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தான் தான் எல்லாம், ரோகித் சர்மா எல்லாம் தனது கேப்டன்ஸியில் விளையாடுவார் என்பது போன்று ஹர்திக் பாண்டியா பேசி வருவதால், ரோகித் சர்மா ரசிகர்கள் கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக எக்ஸ் டிரெண்டிங்கில் RIP HARDIK PANDYA என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அதனை டிரெண்டாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் ரோகித் சர்மா தனது மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியை மேற்கொண்டுள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களுக்குள்ளாகவே இரு அணிகளாக பிரிந்து விளையாட இருக்கின்றன. இதில் ஒரு அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், மற்றொரு அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் பிரிந்து விளையாட இருக்கின்றனர். மும்பையின் கோட்டையான வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியை பார்ப்பதற்கு 3000 ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை இந்தியன்ஸ் விளையாடும் போட்டிகள்:
மார்ச் 24: குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – அகமதாபாத் – இரவு 7.30 மணி
மார்ச் 27 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் – ஹைதராபாத் - இரவு 7.30 மணி
ஏப்ரல் 01 – ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி
ஏப்ரல் 07 – டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் – மும்பை – பிற்பகல் 3.30 மணி