அந்த வகையில், பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வினை டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு, டெல்லி அணி வீரர் ஜெகதீஷா சுஜித்தை பெற்றதோடு கூடுதலாக ஒன்றரை கோடி தொகையையும் பெற்றது. 

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியில் கடந்த இரண்டு சீசன்களாக ஆடிவந்த நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் டிரெண்ட் போல்ட்டை கழட்டிவிட்டுள்ளது. டெல்லி அணியில் ரபாடா இணைந்ததால், டிரெண்ட் போல்ட்டுக்கு ஆடும் லெவனில் பெரும்பாலும் இடம் கிடைக்காமல் இருந்துவந்தது. இந்நிலையில், அவரை அந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுத்துள்ளது. 

டிரெண்ட் போல்ட் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தால் அந்த அணியின் பலம் மேலும் அதிகரிக்கும். ஆனால் டிரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக டெல்லி அணி, மும்பையிடமிருந்து பெறும் வீரர் குறித்த தகவல் வெளிவரவில்லை. 

அதேபோல பஞ்சாப் அணி, ஃபாஸ்ட் பவுலர் அங்கித் ராஜ்பூட்டை கொடுத்துவிட்டு அந்த அணியில் இருக்கும் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதமை பெற்றுள்ளது. கிருஷ்ணப்பா கௌதம் அண்மைக்காலமாக இந்தியா ஏ அணியிலும் உள்நாட்டு போட்டிகளிலும் அபாரமாக ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.