முதல் அணியாக ஹாட்ரிக் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் – புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 14ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியை தழுவியுள்ளது.

Mumbai Indians became the first team to lose a hat-trick and placed in 10th position in IPL 2024 Points Table rsk

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 14ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில் ஆர் ஆர் அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்னும், திலக் வர்மா 32 ரன்னும் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சஹால் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் குவெனா மபாகா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக மபாகா ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை அதிரடியாக விளையாடிய ரியான் பராக் அரைசதம் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக விளையாடிய 3 போட்டியிலும் ராஜஸ்தான் வெற்றி பெற்று ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டியிலும் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios