வான்கடே மைதானம் மும்பையின் கோட்டை – என்ன செய்ய போகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்?

வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 14ஆவது ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Mumbai Indians and Rajasthan Royals Clash Today in 14th IPL 2024 Match at Wankhede Stadium rsk

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இதுவரையில் 13 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், 12 போட்டிகளில் ஹோ கிரவுண்டில் நடந்த போட்டிகளில் அந்தந்த ஹோம் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த 2 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்த 13 ஆவது லீக் போட்டியில் டெல்லிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

டெல்லி கேபிடல்ஸ் அவே மைதானத்தில் நடந்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று தான் இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் அவே மைதானத்தில் 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் மைதானங்களில் நடந்த போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் முறையே 6 ரன்கள் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தற்போது ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் ஐபிஎல் ஹோம் மைதான அணி வெற்றி பெற்று வரும் நிலையில் இன்று 14ஆவது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தனது ஹோம் கிரவுண்டான வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஹோம் கிரவுண்டில் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் தான் முதல் முறையாக அவே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை இதுவரையில் தான் அடைந்த தோல்விக்கும், விமர்சனத்திற்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 28 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 15 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 214, இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 212 ரன்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடைசியாக நடந்த 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. வான்கடே மைதானத்தில் நடந்த இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 5 போடிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

வான்கடே மைதானம்:

பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு உதவக் கூடியதாக இருந்தாலும் குறுகிய பவுண்டரி லைன் அவர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். இந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மொத்தமாக 78 போட்டிகளில் விளையாடி 49 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.   

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios