மும்பையில் கிரிக்கெட் வீரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை பாண்டூப் பகுதியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ராகேஷ் அம்பாதாஸ் பவார். மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவரும் ராகேஷ், கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள சிறுவர்களுக்கு பயிற்சியும் அளித்துவருகிறார். இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்துவந்தார். 

தனது பெண் தோழி ஒருவருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த இவரை சந்தன்வாடி என்ற பகுதியருகே வழிமறித்த 3 பேர், கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து பாண்டூப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ராகேஷுடன் சென்ற பெண் தோழியையும் தீவிரமாக விசாரணை நடத்துவருகின்றனர் போலீஸார். இதுகுறித்து பேசிய ராகேஷின் நண்பர், ராகேஷுக்கும் அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்ததாக தெரிவித்துள்ளார். அந்த கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.