பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் தகுதிச்சுற்று போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. முதல் எலிமினேட்டர் போட்டியும் இன்று இரவே நடைபெறும்.

தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணி, முதல் எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணியுடன், 2வது எலிமினேட்டரில் மோதும்.

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:

உஸ்மான் கவாஜா, காலின் முன்ரோ, ஆசிஃப் அலி, முகமது அக்லக்(விக்கெட் கீப்பர்), ஷதாப் கான்(கேப்டன்), ஹுசைன் டலட், இஃப்டிகார் அகமது, ஹசன் அலி, முகமது வாசிம் ஜூனியர், ஃபஹீம் அஷ்ரஃப், அகீஃப் ஜாவேத். 

முல்தான் சுல்தான்ஸ் அணி:

ஷான் மசூத், முகமது ரிஸ்வான்(கேப்டன், விக்கெட் கீப்பர்), சொஹைப் மக்சூத், ரிலீ ரூசோ, ஜான்சன் சார்லஸ், குஷ்தில் ஷா, சொஹைல் தன்வீர், இம்ரான் தாஹிர், இம்ரான் கான், ப்ளெஸ்ஸிங் முஸாரபானி, ஷாநவாஸ் தானி.