Asianet News TamilAsianet News Tamil

ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு போட்டிகளில் ஆடும் இந்திய அணி..! சிறந்த வீரர்களை கொண்ட 2 அணிகள்

ஒரே சமயத்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்கான 2 வெவ்வேறு அணிகளை தேர்வு செய்துள்ளார் எம்.எஸ்.கே.பிரசாத்.
 

msk prasad picks test and t20 teams for playing in same time
Author
Chennai, First Published Jun 3, 2020, 9:49 PM IST

இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் வீரர்களே மிதமிஞ்சிய அளவில் உள்ளனர். சில நாட்டு அணிகளில் 11 சிறந்த வீரர்களை தேர்வு செய்வதே கடினம். ஆனால் இந்தியாவில் ஒரே நேரத்தில் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடக்கூடிய அளவிற்கு வீரர்கள் உள்ளனர். 

2 வெவ்வேறு அணிகளை வழிநடத்துவதற்கான சிறந்த கேப்டன்களும் உள்ளனர். ஒரே நேரத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடுமளவிற்கு வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். 

அந்தவகையில், ஒரேநேரத்தில் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்கான, இந்திய டெஸ்ட் மற்றும் டி20 அணிகளை முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் தேர்வு செய்துள்ளார். 

விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில், ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் பொதுவாகவே டெஸ்ட் போட்டிக்கென்றே பிரத்யேகமாக புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, இஷாந்த் சர்மா, ரிதிமான் சஹா, அஷ்வின் ஆகிய வீரர்கள் இருக்கின்றனர். எனவே இவர்களுடன் ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோரை டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்துள்ளார் எம்.எஸ்.கே.பிரசாத். 

msk prasad picks test and t20 teams for playing in same time

டி20 அணியில், கேஎல் ராகுல், தவான் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாகவும் ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார்.

எம்.எஸ்.கே.பிரசாத் தேர்வு செய்த டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, விராட்கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஷ்வின், இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி. 

டி20 அணி:

கேஎல் ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், நவ்தீப் சைனி. 

இதேபோல இரண்டு தனித்தனி அணிகளை முன்னாள் வீரர் அஜித் அகார்கரும் தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios