Asianet News TamilAsianet News Tamil

ஃபியூஸ் போன பல்ப்பு, வேகாத பருப்பு.. தொடர் புறக்கணிப்பின் பின்னணி என்ன..? தேர்வுக்குழு தலைவர் அதிரடி

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான அணியை கட்டமைக்கும் பணியை அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே தொடங்கிவிட்டது. 

msk prasad explains why kuldeep and chahal dropped again in t20 squad
Author
India, First Published Aug 31, 2019, 12:15 PM IST

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வென்ற இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிந்து இந்திய அணி நாடு திரும்பியதும் தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவிற்கு வந்து 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்த தொடருக்கான டெஸ்ட் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான அணியை கட்டமைக்கும் பணியை அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே தொடங்கிவிட்டது. அந்த வகையில், தோனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புறக்கணிக்கப்பட்ட குல்தீப்-சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி, தென்னாப்பிரிக்க தொடரிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 

msk prasad explains why kuldeep and chahal dropped again in t20 squad

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டிருந்தனர். தென்னாப்பிரிக்க தொடரிலும் இவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர். குல்தீப் - சாஹல் ஆகிய இருவரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஏ அணியில் ஆடிய சாஹல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த போட்டியில் சாஹல் நன்றாக வீசியும் டி20 அணியில் மீண்டும் இடம் கிடைக்கவில்லை.

இதுகுறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ஸ்பின் பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் முயற்சியில் இருக்கிறோம். ராகுல் சாஹர், க்ருணல் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அபாரமாக செயல்பட்டனர். எனவே அடுத்த வாய்ப்புக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்பதால் அவர்களுக்கு மீண்டும் அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது என்று பிரசாத் தெரிவித்தார். 

msk prasad explains why kuldeep and chahal dropped again in t20 squad

குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி அணியில் இணைந்த புதிதில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினர். ஆனால் உலக கோப்பையில் இருவருமே மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்க தவறிவிட்டனர். நிறைய ஸ்பின்னர்கள் புதிதாக வந்தபோது சுழலில் மிரட்டுவார்கள். அவர்களது கையசைவுகளையும் வேரியேஷன்களையும் எதிரணி பேட்ஸ்மேன்கள் கண்டுபிடித்த பிறகு அவர்களது பருப்பு வேகாது. அப்படி காலப்போக்கில் வேகாத பருப்பானவர்கள் தான் குல்தீப்பும் சாஹலும். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் புறக்கணிக்கப்பட்ட இவர்கள் இருவரும் மீண்டும் தென்னாப்பிரிக்க தொடரிலும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios